நீண்ட இடைவெளிக்கு பிறகு உதயநிதியின் “ஏஞ்சல்”

ஏபிசிடி”, “நேபாளி” படங்களைத் தொடர்ந்து “OST FILMS” ராம சரவணன் தயாரிப்பில் உருவாகும் படம் “ஏஞ்சல்”. தொட்டாசிணுங்கி, சொர்ணமுகி, பிரியசகி, படங்களின் இயக்குநர் அதியமான், நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் இது.

உதயநிதி ஹீரோவாக நடிக்க, அவருடன் தெலுங்கில் வெற்றி பெற்ற “RX 100” படத்தில் நடித்த பாயல் ராஜ்புத் மற்றும் “கயல்” ஆனந்தி ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இமான் இசை.

“உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணித்த பின்னும் மறக்காது ஏஞ்சல்” என்பதை உணர்த்தும் “ரொமாண்டிக் ஹாரர்” கதையில் இப்படம் உருவாகிறது. பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது.

Sharing is caring!