நெடுநல்வாடை ட்ரைலர் வெளியீடு

மார்ச் 15ல் வெளியாக உள்ள நெடுநல்வாடை படத்தின் ட்ரைலர் படக்குழுவால் இன்று வெளியிடப்பட உள்ளது.

பெரும்பாலும் புது முகங்களை கொண்ட படம் நெடுநல்வாடை.இந்த படத்தை  செல்வகண்ணன் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பூ ராமு, மைம் கோபி, இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நட்ராஜ், செந்தில் குமார் உள்ளிட்டோர்  நடிக்கின்றனர்.  இந்த படத்திற்கான தயாரிப்பாளர்கள் இயக்குனர் செல்வாவின் நண்பர்கள். தனது நண்பனின் வெற்றிகாக சக நண்பர்களின் முயற்சியே இந்த படம்.

இந்த படத்திற்கான பாடல் வரிகளை வைரமுத்து  இயற்றி உள்ளார். திருநெல்வேலியில் உள்ள கிராமத்தில் நடக்கும் கதையாக இது அமைக்கப்பட்டுள்ளது. மகள்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை எடுத்து சொல்லும் படமாக இந்த படம் இருக்கும் என படக்குழுவினர்  கூறுகின்றனர்.நெடுநல்வாடை படத்தின் இசையை ஜோஸ் ப்ரங்கிலிங்  அமைத்துள்ளார் .மேலும் நெடுநல் வாடை திரைப்படம் மார்ச 15ல் திரைக்கு வர உள்ளது.


இந்நிலையில்  நெடுநல் வாடை படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட உள்ளது. மேலும் இந்த படத்தின் ட்ரைலரை நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும்  இயக்குனர் கௌதம்  வாசுதேவ்மேனன் ஆகியோர் வெளியிட உள்ளனர்.

Sharing is caring!