நெதர்லாந்து செல்கிறாரா விஜய்… மறுப்பு கொடுத்து விளக்கம்

சென்னை:
இல்ல… இல்ல… அந்த செய்தி பொய் என்று மறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. எதற்காக தெரியுங்களா?

இன்னும் சில தினங்களில் சர்கார் படம் திரைக்கு வரவுள்ள நிலையில் தமிழ்நாட்டு ரசிகர்கள் அனைவரும் தற்போது ரிசர்வேஷன் எப்போது துவங்கும் என்று தான் காத்திருக்கின்றனர்.

சர்கார் ரிலீஸ் அன்று விஜய் நெதர்லாந்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு சிறப்பு காட்சிக்காக வருகிறார் என தகவல் இணையத்தில் பரவியது.
இது வதந்தி என விளக்கம் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. அது முற்றிலும் பொய்யான தகவல் என படத்தை விநியோகிக்கும் நிறுவனம் டுவிட்டரில் கூறியுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!