நெருக்கடி முற்றுகிறது… திணறலில் சிக்கி உள்ள விஷால்

சென்னை:
தயாரிப்பாளர் சங்கத்தில் விஷாலுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளனராம்.

நடிகர் விஷால் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்து வருகிறார். அவருக்கு எதிராக தற்போது சிலர் கிளம்பியுள்ளனராம்.

விஷாலை நீக்கிவிட்டு தலைவர் பதவியில் வேறொருவரை நியமிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளது. காரணம் விஷால் சீனியர் தயாரிப்பாளர்களுக்கான பென்ஷன் தொகையை முழுவதுமாக கொடுக்காதது, திரையரங்குகளில் கியூப், யு.எஃப்.ஒ வை நீக்கியது, இன்சூரன்ஸ் காப்பு தொகையை நீக்கியது என பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்களாம்.

ஏற்கனவே நடிகர் உதயா, ஆர்.கே.சுரேஷ் ஆகியார் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளை ராஜினாமா செய்தனர். இதனால் விஷாலுக்கு நெருக்கடி சூழ்ந்துள்ளதாம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!