நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்திக்கு ஒரு பாடல்

சென்னை:
நேர் கொண்ட பார்வை படத்தில் அஜித்-வித்யாபாலனுக்காக ஒரு பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் `நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித் – வித்யா பாலனுக்கு ஒரு காதல் பாடல் ஒன்று இருக்கிறதாம்.

அஜித் நடித்து வெளியான ‘விஸ்வாசம்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் `நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் அஜித் நடித்து வருகிறார்.

இது இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான `பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. `பிங்க்’ படத்தில் இல்லாத ஒரு கதாபாத்திரத்தை இந்த படத்தில் வடிவமைத்துள்ளார் வினோத்.

அந்த கேரக்டரில் தான் வித்யா பாலன் நடிக்கிறார். இதில் அஜித்-வித்யா பாலனுக்காக ஒரு காதல் பாடலை எழுதியிருக்கிறார் பா.விஜய்.
பி.எஸ்.மித்ரன் – சிவகார்த்திகேயன் படத்தின் இசைக்காக துபாய் சென்றுள்ள யுவன், சென்னை திரும்பியதும் இந்தப் பாடலுக்கான பணியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி – பத்மா மகன், திருச்சி

Sharing is caring!