படக்குழுவுக்கு வாட்ச் பரிசு கொடுத்து அசத்திய நயன்தாரா

சென்னை:
சிவகார்த்தியுடன் நடிக்கும் படத்தில் தன் காட்சிகளை முடித்துவிட்ட நயன்தாரா படக்குழுவினருக்கு பரிசு வழங்கி உள்ளார்.

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் தனது காட்சியை முடித்துவிட்ட நயன்தாரா, படக்குழுவுக்கு வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார்.

சென்னையின் பல்வேறு இடங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்தது. கடைசி நாளில் படக்குழுவினர் அனைவருக்கும் வாட்ச் பரிசளித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நயன்தாரா.

அவரது நடிப்பில் ‘ஐரா’, ‘கொலையுதிர் காலம்’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீசுக்குத் தயாராகி வருகின்றன. தற்போது விஜய் ஜோடியாக ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி

Sharing is caring!