படத்தின் பெயர் அதுவல்ல… கமல் சொல்றார்

சென்னை:
படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை… என்று கமல் தெரிவித்துள்ளார். எதற்கு தெரியுங்களா?

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தேவர் மகன் 2 படம் எடுக்கப்போகிறேன் என அறிவித்தார். அதற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்திருந்தாலும், அவர் ஏன் ஜாதி பெயரை முன்வைத்து மீண்டும் படம் நடிக்கிறார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் நிருபர்கள் அவரிடம் இதுதான் உங்கள் கடைசி படமா? என்று கேட்டதற்கு அவர் ‘அப்படி சொல்ல முடியாது’ என பதில் அளித்துள்ளார். மேலும் சாதி பெயரை வைப்பது ஏன் என கேட்டதற்கு அவர் தேவர் மகன் இரண்டாம் பாகம் எடுக்கிறேன் என தான் கூறினேன், இன்னும் தலைப்பு முடிவாகவில்லை என்று தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!