படத்தில் உருக்கமான காட்சியில் கதறி அழுதிருக்கிறார்

குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வரும் தம்பி ராமையா, ஒரு படத்தில் உருக்கமான காட்சியில் கதறி அழுதிருக்கிறார்.

மைனா படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வாங்கிய தம்பி ராமையா, சமீபத்தில் மகன் உமாபதியை வைத்து ‘மணியார் குடும்பம்’ படத்தை இயக்கினார். அஜித்தின் ‘விஸ்வாசம்’ உட்பட பல படங்களில் நடித்தும் வருகிறார்.

‘காத்தாடி மனசு’ என்ற அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்கும் அவர் ஒரு காட்சியில் நிஜமாக அழுதிருக்கிறார்.

பாசமலர், கிழக்குச் சீமையிலே வரிசையில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை சொல்லும் இந்த படத்தை எஸ்.சேதுராமன் தயாரிக்க என்.எஸ்.மாதவன் இயக்குகிறார்.

தம்பி ராமையாவுக்கு தங்கையாக பருத்தி வீரன் சுஜாதா நடித்துள்ளார். மேலும் மவுரியா, விஜய் லோகேஷ், யுகா, அனிகா, கஞ்சா கருப்பு, யுவராணி ஆகியோரும் நடித்துள்ளனர்.

Sharing is caring!