படத்தில் நடிப்பதற்காக போடப்பட்ட கெட்டப்… காயத்ரி விளக்கம்

சென்னை:
அது படத்தில் நடிப்பதற்காக போடப்பட்ட கெட்டப் என்று காயத்ரி ரகுராமே தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலராலும் திட்டு வாங்கியவர் காயத்ரி ரகுராம். இவர் நிகழ்ச்சிக்கு பின் பல சோதனைகளை சந்தித்துள்ளார் என்பது உண்மையானாலும் அதை அவர் தைரியமாக எதிர் கொண்டார்.

பின் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைக்காட்டி வந்த காயத்ரி இப்போது படங்களில் பிஸியாக நடிக்கிறார். இவர் கர்ப்பமாக இருப்பது போல் ஒரு புகைப்படம் வெளியானது, விவாகரத்து பெற்ற இவர் இப்போது எப்படி கர்ப்பமானார், இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா அவரது கணவர் யார் என நிறைய கேள்விகள் எழுந்தது.

இந்நிலையில் அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். ஹரிஷ் உத்தமனுடன் நடிக்கும் ஒரு படத்தில் அவர் கர்ப்பமாக இருப்பது போல் நடிக்கிறாராம். இத்தகவலை காயத்ரியே தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!