படப்பிடிப்பில் இருந்தால் வரவேற்பு நிகழ்ச்சியில் தாமதமாக பங்கேற்ற தனுஷ்

சென்னை:
அசுரன் படப்பிடிப்பு இருந்ததால் தாமதமாக பங்கேற்றாராம் நடிகர் தனுஷ். என்ன விஷயம் தெரியுங்களா?

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா – விசாகன் திருமணம் நாளை 11-இல் நடக்க இருக்கிறது. 4 நாட்கள் நடைபெறும் இந்த திருமண நிகழ்வில் முதல் நாள் ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ரஜினிகாந்துக்கு நெருக்கமானவர்கள் கலந்துகொண்டனர்.
ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். சவுந்தர்யா திரைத்துறையில் பணியாற்றும் நிலையில், விசாகன் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு விதைகள் அடங்கிய பை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினியின் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

தனுஷ் தாமதமாக வந்து நிகழ்வில் கலந்துகொண்டார். தனுஷ் தாமதமாக வந்ததற்கான காரணம் அசுரன் படப்பிடிப்பில் இருந்ததால் அவர் நிகழ்வு முழுக்க பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டில் ராதா கல்யாண வைபவம் நடக்கிறது. நாளை 11ம் தேதி மிக நெருக்கமான உறவினர்கள் முன்னிலையில் ரஜினியின் வீட்டிலேயே எளிமையாக திருமணம் நடைபெற இருக்கிறது.

தொடர்ந்து எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு நடைபெற உள்ளது. இதில் சினிமா, அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!