படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படம் வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

சென்னை:
சர்கார் படப்பிடிப்பில் எடுக்கப்படும் படங்களை 5 நாட்கள் வெளியிடுவதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது. அதன்படி படங்களை வெளியிட்டு வருகிறது.

விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விஜய் டப்பிங் பணிகளில் உள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தொடர்ந்து 5 நாட்களுக்கு அடுத்தடுத்து வெளியிடுவதாக அறிவித்தனர். அதன் படி புகைப்படங்கள் வந்துகொண்டிருக்கிறது.

தற்போது மேலும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கொண்டாட்டத்தில் இருக்கும் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தின் மிகுதியில் இருக்கிறார்கள்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!