படப்பிடிப்புக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்த ஷ்ருஷ்டி டாங்கே

சென்னை:
நடிகை ஷ்ருஷ்டி டாங்கே பப்ளிக் டாய்லெட்டில் காஸ்ட்யூம் மாற்றி படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளார்.

நடிகர் கதிர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சத்ரு. ஷ்ருஷ்டி டாங்கே ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் பொன்வண்ணன், நீலிமா, சுஜா வாருணி போன்றோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

விரைவில் வெளியாக இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் இயக்குனர் நவீன் நஞ்சுதன் பேசுகையில், இப்படத்தில் கதிர் போலீசாக நடித்துள்ளார். இப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் படம்.

படம் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை விறுவிறுப்பாகச் செல்லும். சிருஷ்டி டாங்கே ஷூட்டிங்கின் போது அளித்த ஒத்துழைப்பை மறக்கமுடியாது. பாடல் காட்சிக்காக நாயகி 20 காஸ்ட்யூம் மாற்ற வேண்டியிருந்தது. புதுச்சேரி கடற்கரை பப்ளிக் டாய்லெட்டில் காஸ்ட்யூம் மாற்றி நடித்தார் என்றார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!