படப்பிடிப்பு தளத்தில் அஜித் – பிரபாஸ் சந்திப்பு

சென்னை:
தன் படப்பிடிப்பு தளத்தின் அருகில் பிரபாஸ் படப்பிடிப்பு நடப்பதை அறிந்து நேரில் சென்று பேசியுள்ளார் நடிகர் அஜித். இதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

அஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவரை போலவே தெலுங்கு சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் பிரபாஸ்.
இவர்கள் இருவருமே பில்லா படத்தை ரீமேக் செய்து நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அஜித் தற்போது படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றுள்ளார்.

அங்கு அஜித் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் தான் பிரபாஸ் நடிக்கும் சஹோ படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகின்றதாம். இதை அறிந்த அஜித், பிரபாஸை சந்தித்து பேசி உள்ளார். இந்த தகவல் தற்போது வெளிவந்து சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!