படப்பிடிப்பு நடந்த பகுதியில் உண்மையான அடிதடி… ஓடி ஒளிந்த ஜி.வி.பிரகாஷ்

சென்னை:
உண்மையான அடிதடி நடந்ததால் ஜீ.வி. பிரகாஷ் மற்றும் படக்குழுவினர் அச்சத்தில் அலறி அடித்து ஓடியுள்ளனர்.

நடிகர் ஜீ.வி.பிரகாஷ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அதில் வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் என்ற படம் முக்கியமானது. இந்த படத்தில் அபர்ணதி ஹீரோயினாக நடிக்கிறார்.

ஜெயில் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை கண்ணகி நகரில் நடைபெற்றது. அந்த பகுதியில் அடிக்கடி அடிதடி தகராறு நடப்பது வழக்கம் தான்.

ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே நிஜமாகவே அரிவாள், கம்போடு ஒரு கோஷ்டி இன்னொரு கோஷ்டியை அந்த பகுதியில் தாக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியான படக்குழு ஓடி ஒளிந்துள்ளது. உயிர் பிழைத்தால் போதும் என்று ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி ஆகியோர் அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் சென்று ஒளிந்துகொண்டுள்ளனர். பின்னர் அந்த சண்டை முடிந்த பிறகு வந்து ஷூட்டிங்கை தொடர்ந்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!