படமாகிறது…நாட்டை உலுக்கிய சம்பவம் படமாகிறது

கிருத்திகா உதயநிதி இயக்கிய ‘காளி’ படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடித்திருந்தார் நடிகை அஞ்சலி. தற்போது மம்மூட்டியின் ‘பேரன்பு’, சசிகுமாரின் ‘நாடோடிகள் 2’, ராஜு விஸ்வநாத்தின் ‘லிசா’, விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படம், பிரவீன் பிக்காட்டின் ‘ஒ’ என அடுத்தடுத்து பட மழையில் நனைந்துக் கொண்டிருக்கிறார்.

இப்போது, மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க அஞ்சலி கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2008-ஆம் ஆண்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆருஷி தல்வாரின் கொலை வழக்கை மையமாக வைத்து உருவாகும் படத்தில் தான் அஞ்சலி நடிக்கிறாராம்.

அதோடு இந்தப் படத்தில் இன்னொரு நாயகியாக ராய் லக்ஷ்மி நடிப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதன் இயக்குநர் மற்றும்  தொழில்நுட்ப கலைஞர்கள் – நடிகர்களின் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing is caring!