படம் செய் நவ., 23ல் ரிலீஸ்

புதியவர் ராஜ்பாபு இயக்கத்தில் நகுல், ஆஞ்சல் முஞ்சல், சந்திராகா ரவி, நாசர், பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகி உள்ள படம் செய். காதல் உடன் கூடிய ஆக்சன் படமாக தயாராகி உள்ள இப்படம், பல முறை ரிலீஸ் தள்ளிப்போய், வருகிற நவ., 16-ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.

திடீரென கடந்தவாரம் வெளியாக வேண்டிய விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படம் உள்ளே நுழைந்ததாலும், சர்கார் படம் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக தொடருவதாலும், செய் படத்திற்கு போதிய தியேட்டர் கிடைக்கவில்லை.

இதனால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக இருதினங்களுக்கு முன்னர் அறிவித்தனர். இந்நிலையில், அடுத்தவாரம் நவ., 23ல் படம் வெளியாவதாக தற்போது அறிவித்துள்ளனர்.

Sharing is caring!