படம் பண்ணுவாரா?

‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ என வித்தியாசமாக பெயரிட்டு படம் இயக்கி வெளியிட்டவர் பார்த்திபன். பெரிய அளவுக்கு பரபரப்பாக்கப்பட்ட அளவுக்கு அந்தப் படம் ஓடவில்லை. ஆனாலும், படத்தை பார்க்க இசையமைப்பாளர் இளையராஜா விரும்பவே, அவருக்காக ஸ்பெஷல் ஷோ போட்டு காண்பித்தார் பார்த்திபன்.

அதற்கு அடுத்ததாக, பல கதைகளை தயார் செய்து வைத்திருக்கிறார் பார்த்திபன். ஆனால், சரியான தயாரிப்பாளர்கள் இல்லாததால், அவர், அமைதியாக இருக்கிறார். இந்நிலையில், நடிகர் சந்திரபாபு குறித்த தகவல்களை நிறைய திரட்டி வருகிறார் பார்த்திபன். அவரது வாழ்க்கையை மொத்தமாக திரட்டும் பார்த்திபன், அவர் சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும் திரட்டி வருகிறார். விரைவில், சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தை எடுக்கவே பார்த்திபன் இப்படி தகவல் திரட்டுகிறார் என, சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர்.

Sharing is caring!