படம் பேட்ட ரிலீஸ் தள்ளிப்போகலாம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட. ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், இயக்குநர் மகேந்திரன் என பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ளனர். அனிருத் இசை. இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மின்னல் வேகத்தில் நடத்தப்பட்டு, திட்டமிடப்பட்ட 15 நாட்களுக்கு முன்னரே முடிந்தது.

இப்படம், பொங்கலுக்கு வெளிவருவதாக செய்திகள் வந்தன. அன்றைய தினம் அஜித்தின் விஸ்வாசம், சிம்புவின், வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகியவையும் ரிலீஸாவதாக இருந்தன. இதனால் படங்கள் வெளியீட்டில் சிக்கல் நிலவின.

ஆனபோதும் ரஜினியின் 2.0 படம் நவ., 29-ல் ரிலீஸாவதால் அதற்கடுத்த குறுகிய காலத்தில் பேட்டயை ரிலீஸ் செய்ய வேண்டாம் என படக்குழு எண்ணியிருந்தனர். இதனால் பேட்ட ரிலீஸ் தள்ளிப்போகலாம் என சொல்லப்பட்ட நிலையில் பொங்கலுக்கு பேட்ட படம் வருவதை உறுதி செய்துள்ளனர்.

இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ், பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாவதை உறுதி செய்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் ரஜினி, இளமையான தோற்றத்தில் சிம்ரன் உடன் கையில் பூக்களுடன் நடந்து வருவது போன்று உள்ளது. மேலும் பேட்ட பொங்கலுக்கு பராக் என்றும் கூறப்பட்டுள்ளது.

பேட்டயின் இந்த அறிவிப்பால் அஜித்தின் விஸ்வாசம் மற்றும் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Sharing is caring!