படுக்கைக்கு அழைத்ததாலேயே நடிப்பிலிருந்து விலகினேன்: சமீரா ரெட்டி பரபரப்பு!

கவுதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. வெடி, வேட்டை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பதுடன் இந்தி, தெலுங்கு, கன்னட மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு தொழில் அதிபர் அக்‌ஷய் வர்தேவுடன் திருமணம் நடந்தது. இதற்கு முன்னதாக 2013ம் ஆண்டே அவர் சினிமாவிலிருந்து விலகினார். இதுகுறித்து மவுனம் காத்து வந்த சமீரா தற்போது அதிரடி புகார் கூறியிருக்கிறார்.

படுக்கைக்கு அழைப்பதால் சினிமாவிலிருந்து விலகியதாக பகீர் குற்றச்சாட்டு கூறியிருக்கிறார் சமீரா. இதுகுறித்து அவர் கூறும்போது,

’சினிமாவில் என்ன மாற்றம் தேவை என்கிறார்கள். முக்கியமாக நடிகைகளிடம் ஒரு சிலர் எதிர்பார்ப்பதை மாற்ற வேண்டும். நடிகைகளை கவர்ச்சியான போகப் பொருளாகவே பார்க்கிறார்கள.

படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு வா என்று அழைக்கிறார்கள். அது எனக்கு பிடிக்காததால் நடிப்பிலிருந்து விலகினேன். பெண்களை போகப்பொருளாக பார்க்கும் எண்ணம் மாறுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். நடிகர், நடிகைகளுக்கு இடையே பாரபட்சம் காட்டப்படுகிறது. இதுதான் திரையுலகின் நிலை.

இது எப்போது மாறுகிறதோ அப்போதுதான் சினிமாவுக்கு நல்ல தருணமாக இருக்கும். அந்த மாற்றம் தொடங்கியிருந்தாலும் அது குழந்தை நடப்பதைப் போல் மிகவும் மெதுவாக நடக்கிறது’ என்றார்.

பல்வேறு மொழிகளில் நடித்திருக்கும் சமீரா தன்னை தவறான எண்ணத்துடன் அழைத்தது யார் என்பதை குறிப்பிட்டு சொல்லவில்லை.

இவருக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் நிலையிலும், நீச்சலுடை புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Sharing is caring!