படுக்கைக்கு வந்தால் அசிஸ்டென்ட்… டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மீது பாலியல் சர்ச்சை

சென்னை:
படுக்கைக்கு வந்தால் அசிஸ்டென்ட் கோரியோகிராபர் பணி தருகிறேன் என்று டான்ஸ் கற்றுக் கொள்ள வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் டான்ஸ் மாஸ்டர் கல்யாண் என்று பதிவிட்டு டுவிட்டரை அதிர விட்டுள்ளார் சின்மயி.

கோலிவுட்டில் தற்போது பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகம் குவிந்து வருகிறது. வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது முன்னணி டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மீது இலங்கை பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

அதை சின்மயி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அஜித்தின் பல படங்களில் பணியாற்றியுள்ளவர் கல்யாண். சால்சா டான்ஸில் ஆர்வம் கொண்ட இலங்கை பெண் ஒருவர் கடந்த 2010ல் சென்னை வந்துள்ளார். டான்ஸ் க்ளாசில் அவர் கல்யாண் மாஸ்டரை சந்தித்துள்ளார்.

அப்போது அவருடன் நடனம் ஆடுமாறு கேட்டுள்ளார். ஆடும்போது தகாத இடங்களில் தொட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியான அந்த பெண் ‘எனக்கு தலைவலி’ என கூறி அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
பின்னர் அன்று இரவு போன் செய்த கல்யாண் மாஸ்டர் தன்னுடைய படுக்கைக்கு வந்தால் அசிஸ்டன்ட் கோரியோகிராபர் பணி தருவதாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியான அந்த பெண் வேண்டாம் சாமி இந்த சினிமா துறைய வேண்டாம் என்று முடிவெடித்து தன் சொந்த ஊருக்கே திரும்பி சென்றுவிட்டால். கல்யாண் மாஸ்டரால் தன் கனவையே விட்டுவிட்ட அந்த பெண்ணுக்கு தற்போது திருமணம் முடிந்துள்ளதாம். இந்த டுவிட் கோலிவுட்டில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சுனாமியை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!