பட்ஜெட் பற்றிய வதந்திக்கு இயக்குனர் ஷங்கர் முற்றுப்புள்ளி

சென்னை:
அவ்வளவு பட்ஜெட்… இவ்வளவு பட்ஜெட் என்று வந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.

இயக்குனர் ஷங்கர் மிக பிரமாண்டமாக இயக்கியுள்ள 2.0 படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. இந்தியாவே மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த படம் உலகம் முழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் பட்ஜெட் 600 கோடி என்று தகவல்கள் உலா வந்தபடியே இருந்தது. இதற்கு இயக்குனர் ஷங்கர் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

“உண்மையான பட்ஜெட் தயாரிப்பாளருக்கு தான் தெரியும். எனக்கு தெரிந்தவரை தயாரிப்பு செலவு ரூ.400 முதல் 450 கோடி வரை இருக்கும். அது தவிர தயாரிப்பாளரின் மற்ற விளம்பர செலவுகள் தனி” என்று தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!