“பட்டிபுலம்” தணிக்கை சான்றிதழ் பெற்றது

வளர்ந்து வரும் காமெடி நடிகர் யோகி பாபு.  இவர் நடித்த முதல் திரைப்படம் இயக்குனர் அமீர் நடிப்பில் வெளிவந்த “யோகி”.  கூட்டத்தில் ஒருவராக நடித்து வந்த யோகி பாபு தற்பொழுது முன்னனி பிரபல காமெடி நடிகராக உயர்ந்துள்ளார்.

இந்நிலையில் யோகி பாபு  ஹீரோவாக நடித்துள்ள படம்  ‘பட்டிபுலம்’.  இந்த திரைப்படத்தை இயக்குனர் சுரேஷ் இயக்கியுள்ளார்.  மேலும் இப்படதிற்கு வல்லவன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் யோகிபாபு நடித்துள்ள பட்டிபுலம் திரைப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.  இந்த திரைப்படம் நடப்பு மாதத்திலேயே திரைக்கு வர உள்ளது.

Sharing is caring!