பயங்கரவாதம் ஒருபோதும் வெல்லக்கூடாது

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் NGK (நந்த கோபாலன் குமரன்).

சாய் பல்லவி, ராகுல் ப்ரீத்சிங், தலைவாசல் விஜய், உமா பத்மநாபன், பொன்வண்ணன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இது முழுக்க முழுக்க சூர்யா நடிக்கும் முதல் அரசியல் படம். யுவன் இசை அமைத்திருக்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படம் மே மாதம் 31 ஆம் திகதி வெளியாகிறது.

படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (29) நடபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய சூர்யா, இலங்கையில் நடந்த தாக்குதல் சம்பவம் மிகவும் வேதனையளிப்பதாகவும் பயங்கரவாதம் ஒருபோதும் வெல்லக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

Sharing is caring!