பயங்கரவாதிகளை வளர்த்து விடுவதை பாகிஸ்தான் நிறுத்தணும்… அமெரிக்கா கண்டனம்

வாஷிங்டன்:
நிறுத்தணும்… பயங்கரவாதிகளை வளர்ப்பதை பாகிஸ்தான் நிறுத்தணும் என்று அமெரிக்கா கண்டிப்பு காட்டியுள்ளது.

பாகிஸ்தான் எல்லை தாண்டிய தாக்குதல்களை தடுப்பதுடன், பயங்கரவாதிகளை வளர்ப்பதையும் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

புல்வாமாவில் பிப்ரவரி 14ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவிற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
சமீபத்தில் இந்திய வெளியுறவு செயலாளர் விஜய் கோகலேவை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் சந்தித்தபோது, இந்தியாவிற்கு அமெரிக்காவின் ஆதரவை தெரிவித்தார்.

பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக “உறுதியான மற்றும் மீறமுடியாத நடவடிக்கை” எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்காவும் இந்தியாவும் கேட்டுக்கொண்டன.
இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ அளித்த பேட்டியில் கூறியதாவது:

பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கடந்த பிப்ரவரி 14 ந்தேதி இந்தியாவில் என்ன நடந்தது என்பதை நாங்கள் கண்டோம். பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகளால் மோதல் ஏற்பட்டது. எனவே இந்த விஷயத்தில் பாகிஸ்தான் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். பயங்கரவாதிகளை வளர்ப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்.

டொனால்டு டிரம்ப் நிர்வாகம் பாகிஸ்தானுக்கு எதிராக வேறு எந்த முந்தைய அரசாங்கங்களும் எடுக்காத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்துவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!