பரியேறும் பெருமாள் ரீமேக்

கதிர்  நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. சாதிய பாகுபாடுகளை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்தது.

‘பரியேறும் பெருமாள்’தற்போது கன்னட மொழியில் ரீமேக் ஆகவுள்ளது. இப்படத்தினை காந்தி மணிவாசகம்  இயக்குகிறார், மைத்ரேயா எனும் புதுமுக நடிகர் நாயகனாக அறிமுகம் ஆக உள்ளார்.

விரைவில் இப்படத்தின் தொடக்க விழா பெங்களூரில்  ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அதில் இப்படத்தின் ஹீரோயின், வில்லன், மற்றும் இதர கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Sharing is caring!