பல ஆண்டு காதல் திருமணத்தில்…

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புரூனா அப்துல்லா பிரேசில் நாட்டில் பிறந்து வளர்ந்தவர். புகழ்பெற்ற மாடலாக இருந்த அவர், அங்குள்ள படங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு இந்தியா வந்தார். தி ஹேட் ஸ்டோரி என்ற படத்தில் படுகவர்ச்சியாக நடித்து பரபரப்பானார். அதன் பிறகு தமிழில் பில்லா இரண்டாம் பாகத்தில் அஜித் ஜோடியாக நடித்தார். தொடர்ந்து ஹிந்திப் படங்களில் நடித்து வந்தார்.

புரூனாவுக்கும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த அல் என்பவருக்கும் பல ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது. இருவரும் ஜோடியாக உலகத்தை சுற்றி வந்தார்கள். இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை புரூனா அடிக்கடி வெளியிடுவார்.

இந்த நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். இருவரும் சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலையின் உச்சிக்கு சென்றனர். அங்கு அல், புரூனாவுக்கு நிச்சயதார்த்த மோதிரம் அணிவித்தார். இதை கண்ணீர் மல்க, மண்டியிட்டு ஏற்றுக் கொண்டார் புரூனா. இந்த காட்சியை அவர் தனது இன்ஸ்ட்ராகிராமில் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.

“இன்று எனது வாழ்க்கையில் சிறந்த நாள். இந்த மனிதரை நான் திருமணம் செய்து கொள்கிறேன். என்னை அவர் இளவரசி மாதிரி பார்த்துக் கொள்வார். இந்த உலகின் அதிர்ஷ்டமான பெண்ணாக என்னை உணர்கிறேன். இந்த வியப்பான நிகழ்வு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது” என்று எழுதியிருக்கிறார் புருனா.

Sharing is caring!