பல சாதனைகள் முறியடிப்பு… 2.0 செய்யும் அசால்ட் சாதனைகள்

சென்னை:
சூப்பர் ஸ்டாரின் ரஜினியின் 2.0 படத்தின் சாதனைகள் கிடுகிடுவென்று உயர்ந்து வருகிறது.

சர்காரை தாண்டி ரஜினியின் 2.0 எல்லா விஷயங்களில் சாதனை செய்யும் படமாக அமைந்து வருகிறது. நேற்று தான் படம் வெளியாகி இருக்கிறது. அதற்குள் புக்கிங், திரையரங்குகள் கணக்கு என பல விஷயங்களில் முன்னிலையில் உள்ளது.

இப்போதும் ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக ஒரு தகவல். இந்த வருடத்தில் அதிகம் ப்ரீ புக்கிங் செய்யப்பட்ட படங்களில் ரஜினியின் 2.0 அதிக வரவேற்பை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த விஷயத்தை ரோஹினி, வெற்றி போன்ற திரையரங்க உரிமையாளர்கள் தங்களது டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!