பல ஜோடிகளை பின்னுக்கு தள்ளி டைட்டிலை வென்ற ஒரு ஜோடி இவர்கள் தான்!

தமிழ் சானல்களில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளில் அண்மையில் வந்த ஒன்று மிஸ்டர் அண்டு மிசஸ் சின்னத்திரை. இந்த ரியாலிட்டி ஷோவில் செந்தில் ராஜலெட்சுமி, மணிமேகலை உசேன், நிஷா ரியாஸ், தங்கதுரை அருணா ஆகியோருடன் இன்னும் பல ஜோடிகள் கலந்துகொண்டன.

இதில் பல டாஸ்குகள் ஜோடிகளுக்கு கொடுக்கப்பட்டது. அதை சிறப்பாக செய்த 6 ஜோடிகள் இறுதி சுற்றுக்கு தேர்வானார்கள். மேலும் சுபர்ணன் ப்ரியா, ப்ரியா பிரின்ஸ், தங்கதுரை அருணா ஆகிய ஜோடிகள் வெளியேறின.

கடைசியில் சங்கரபாண்டியன் ஜெயபாரதி ஜோடி வெற்றி பெற்று மிஸ்டர் அண்டு மிசஸ் சின்னத்திரை 2019 பட்டத்தை பெற்றுள்ளது. சங்கரபாண்டி இயக்குனர் பாரதி ராஜா தயாரித்து வழங்கிய தெக்கித்திப்பொண்ணு சீரியலில் அறிமுகமாகி சரவணன் மீனாட்சி சீரியலில் பிரபலமானார். ஜெயபாரதி ஆசிரியையாக பணிபுரிகிறார்.

இந்த இறுதி சுற்று நிகழ்ச்சி நாளை மாலை டிவியில் ஒளிபரப்படுகிறதாம்.

Sharing is caring!