பல நடிகர்கள் ரஜினியின் படத்தை முதல்நாள், முதல் ஷோவில் பார்த்துவிடுவார்கள்

ரஜினி படம் வெளியாகிறது என்றால் அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பல திரைப்பிரபலங்களுக்கும் அந்தநாள் கொண்டாட்டமான நாள் தான். பல நடிகர்கள் ரஜினியின் படத்தை முதல்நாள், முதல் ஷோவில் பார்த்துவிடுவார்கள். அவற்றில் முக்கியமானவர் நடிகர் தனுஷ்.

ரஜினியின் ஒவ்வொரு படத்தையும் முதல்நாள் முதல்ஷோவில் பார்ப்பவர், இன்று(ஜன.,10) வெளியாகி உள்ள பேட்ட படத்தையும் பார்த்துள்ளார். தனுஷ், த்ரிஷா, லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும், சென்னை ரோகினி தியேட்டரில், பேட்ட படத்தின் முதல்நாள் முதல்காட்சியை ரசிகர்களுடன் கண்டு களித்தனர்.

ரஜினியின் ஸ்டைலான நடிப்பை பார்த்துவிட்டு சில இடங்களில் தனுஷூம் எழுந்தும் ஆட்டம் போட்டுள்ளார். அதேப்போன்று சென்ட்டிமென்ட்டான மனதை உருக்கும் சில காட்சிகளில் கண்கலங்கியும் உள்ளார்.

Sharing is caring!