பள்ளிக்கூடம் பாடல் வெளியீடு

ஆதியின்  நட்பே துணை படதிலுள்ள ஃபேரவல் குறித்த‌  “பள்ளிக்கூடம்” பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு  ஆதி நடிக்கும் அடுத்த படம் நட்பே துணை.   இந்த திரைப்படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார்.  இப்படத்தில் கௌசல்யா, அனகா, கரு.பழனியப்பன், பழைய ஜோக் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  மேலும் நட்பே துணை படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.  இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்தது.

இந்நிலையில் நட்பே துணை படத்திலுள்ள ஃபேரவல் சாங் வெளியிடப்பட்டுள்ளது.  பள்ளி தோழமை பிரிவு மற்றும் கல்லூரி நட்பு வட்டாரங்களின் பிரிவை பாடலாக அமைத்துள்ளனர். இந்த பாடலை தனது நண்பர்களுக்கு சமர்பிப்பதாக ஹிப்ஹாப் தமிழா ஆதி கூறியுள்ளார்.

Sharing is caring!