பழம்பெரும் பின்னணி பாடகி ராணி காலமானார்.

சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த பழம்பெரும் பின்னணி பாடகி ராணி (75), காலமானார்.

1951-ம் ஆண்டு, 8 வயதில் தெலுங்கில் வெளியான ரூபவாஹினி படத்தில் பாட தொடங்கினார் ராணி. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஒடியா, சிங்களம் உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.

தமிழில், தேவதாஸ் படத்தில் இவர் பாடிய எல்லாம் மாயை தானா… பாடல் மிகவும் பிரபலம். இலங்கை நாட்டின் தேசிய கீதத்தை பாடியவரும் இவரே.

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், முன்னாள் முதல்வர் காமராஜர் முன்னிலையில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவரது குரலை கேட்ட காமராஜர், இன்னிசை ராணி’ என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்தார்.

Sharing is caring!