பவர் ரேஞ்சரில் ரெட் ரேஞ்சராக நடித்த நடிகர் திடீர் மரணம்..!

பவர் ரேஞ்சர்ஸ் நிஞ்சா ஸ்டார்ம், பவர் ரேஞ்சர்ஸ் தொடர்களில் மிகவும் பிரபலமானது. இதில் ரெட் ரேஞ்சராக நடித்திருக்கும் ஷேன் கிளார்க் என்ற கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது.

பவர் ரேஞ்சர்ஸ் தொடரில் ரெட் ரேஞ்சர் என்ற கதாபாத்திரம் ஒரு தலைவனை போன்றது என்பதால் அக்கதாபாத்திரத்தில் பொதுவாகவே பிரபலம்.

ஷேன் என்ற கதாபாத்திரத்தில் ரெட் ரேஞ்சராக நடித்த இவரின் உண்மையான பெயர் புவா மஹாசிவா. நியூசிலாந்தில் வசித்து வருகிறார்.

இவர் இன்று காலை சடலமாக போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டார். 38 வயதே ஆகும் இவர் மரணமடைந்துள்ளார். இவர் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

Sharing is caring!