பவர் ஸ்டார் சீனிவாசன், அவரது மனைவியை கடத்திய 5 பேர் கைது

சென்னை:
பவர்ஸ்டார் சீனிவாசனை கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் நடிகர் பவர்ஸ்டார் கடத்தப்பட்டதாக வந்த தகவல் தமிழ் சினிமா துறையில் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாங்கிய 1 கோடி ரூபாய் கடனுக்காக மனைவி பெயரில் உள்ள பங்களாவை எழுதி வாங்க பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் மனைவியை ஒரு கும்பல் கடத்தி உள்ளது என்று பவர் ஸ்டாரின் மகள் அதிர்ச்சி புகார் கூறினார்.

இதையடுத்து போலீஸ் அந்த கும்பலை தேட ஆரம்பித்தது. இதற்கிடையில் அந்த கும்பல் பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் அவரது மனைவியை விடுவித்தனர். இந்த வழக்கில் போலீஸ் தற்போது ஒரு பைனான்சியர் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். விசாரணைக்காக அவர்களை சென்னை கொண்டு வந்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!