பவர் ஸ்டார் சீனிவாசன், மனைவி கடத்தல்… மகள் பரபரப்பு தகவல்

சென்னை:
என் அப்பா பவர்ஸ்டார் சீனிவாசன் மற்றும் அம்மாவை சிலர் கடத்தி வைத்துள்ளனர் என்று அவரது மகள் பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளார்.

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் கடந்த சில நாட்களாக காணவில்லை என சமீபத்தில் தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது பவர்ஸ்டாரின் மகள் வைஷ்ணவி சில அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். சீனிவாசன் வாங்கிய கடனுக்காக அவரை மர்ம கும்பல் குன்னூரில் அடைத்து வைத்துள்ளார்களாம். சொத்தை எழுதி கொடுத்தால் தான் விடுவோம் என மிரட்டி வருகிறார்களாம். அவரை மீட்கசென்ற அவரின் மனைவியையும் பிடித்து வைத்துள்ளார்களாம்.

அவர்கள் இருவரையும் மீட்கவேண்டும் என பவர் ஸ்டார் மகள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!