பாகுபலி-2 படத்தின் வசூலை முந்தியது 2.0 படம்

சென்னை:
பாகுபலி – 2 படத்தின் வசூலை முந்தியுள்ளது 2.0 படம். அதுவும் பாகிஸ்தானில் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

2.0 உலகம் முழுவதும் வசூல் சாதனை நடத்தி வருகின்றது. இப்படம் இந்திய சினிமாவில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் 2.0 பீவர் பாகிஸ்தானிலும் பற்றிக்கொண்டது, இதற்கு முன் பாகுபலி-2 பாகிஸ்தானில் ரூ.5 கோடி வரை வசூல் செய்திருந்தது.

இதை 2.0 முறியடித்துள்ளது, ஆம், பாகிஸ்தானில் ரூ 5 கோடி வரை 2.0 வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த வாரத்திற்குள் ரூ.6 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!