பாக்சராகும் ஹரிஸ் கல்யாண்

புரியாத புதிர் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கோடியின் அடுத்த படத்தில் பைக்கர் மற்றும் பாக்சராக ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார் ஹரிஷ் கல்யாண். குறிப்பாக இவருக்கு ரசிகைகள் அதிகம். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சனுடன் இணைந்து இவர் நடித்த பியார் பிரேமா காதல் படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தை புதுமுக இயக்குநர் இளம் இயக்க, யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்புக்கு பிறகு தற்போது ஹரிஷ் கல்யாண் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இன்னும் பெயரிட படாத இந்த படத்தை விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கோடி இயக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் ம.கா.ப ஆனநத் மற்றும் பாலசரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இதில் ஹரிஷ் கல்யாண் பைக்கர் மற்றும் பாக்சராக நடிக்கிறார்.

Sharing is caring!