பாட்டி ஆகி விட்டேன் : ராய் லட்சுமி

ஜூலி 2-க்கு பிறகு நீயா 2 படத்திலும், மலையாளத்தில் சில படங்களிலும் நடித்து வருகிறார் ராய் லட்சுமி. இன்னும் திருமணம் ஆகாத ராய் லட்சுமி, பாட்டியாகிவிட்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

“என் வயதை உடைய பெண்கள் எல்லாம் அம்மாவாக இருக்க, நான் இந்த இரண்டு பேருக்கும் பாட்டியாகி உள்ளேன்” என இரண்டு பூனைக்குட்டிகளுடன் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார் ராய் லட்சுமி.

பிள்ளை போன்று செல்லமாக வளர்த்து வந்த பூனை, இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. அதை வெளிப்படுத்தும் விதமாக தான் பாட்டியாகிவிட்டதாக கூறியிருக்கிறார் ராய் லட்சுமி.

Sharing is caring!