‘பாண்ட் ஆப் பிரதர்ஸ்’ தலைப்பு புகைப்படம் பெற்றது விருதை!

வாஷிங்டன்:
விருது வழங்கல்… சிறந்த வன விலங்கு புகைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.

அமெரிக்காவில், 2019 ஆண்டிற்கான சிறந்த வன விலங்கு புகைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா வாஷிங்டனில் நடந்தது. இவ்விழாவில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர்.

அவற்றில் 25 புகைப்படங்களை ‘இயற்கை வரலாற்று அரங்காட்சியகம்’ தேர்வு செய்தது. இந்த 25 புகைப்படங்களில் மக்களிடம் அதிக வாக்குகள் பெறப்படும் புகைப்படத்திற்கு விருது வழங்கப்படும். அதன்படி, மக்களிடம் நடந்த வாக்கெடுப்பில், நியூசிலாந்தைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் டேபிட் லாய்ட் எடுத்த ‘பாண்ட் ஆப் பிரதர்ஸ்’ எனும் தலைப்பில் எடுக்கப்பட்டிருந்த இரு ஆண் சிங்கங்கள் தங்கள் பாசத்தினை வெளிப்படுத்தும் புகைப்படம் அதிக வாக்குகள் பெற்று, சிறந்த வனவிலங்கு புகைப்பட விருதை தட்டிச் சென்றது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!