பாய் பிறண்ட் அமையவில்லை…நடிகை நிவேதா கவலை!

நடிகை நிவேதா பெத்துராஜ் தனக்கு இன்னும் பாய் பிரண்டு அமையவில்லை என்றும் அதற்கு இப்போது நேரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகை நிவேதா பெத்துராஜ் வில்லேஜ் வேடமாக இருந்தாலும் சரி மார்டன் கேரக்டராக இருந்தாலும் சரியாக பொருந்துகிறார். அண்மையில் ஜெயம் ரவியுடன் இவர் இணைந்து நடித்த டிக் டிக் டிக் படம் வெற்றி பெற்றுள்ளது.

இதனால் ஹை எனர்ஜி லெவலில் உள்ளார் நடிகை. தற்போது இயக்குநர் எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி, வெங்கட்பிரபுவின் பார்ட்டி, விஜய் ஆண்டனியின் திமிர் பிடிச்சவன், பிரபுதேவாவுடன் ஒரு படம் என ஏராளமான படங்களில் படுபிசியாக உள்ளார் நிவேதா பெத்துராஜ். தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த அவரிடம் பாய்பிரண்டு அமையவில்லையா என கேட்டதற்கு இல்லையே, இன்னும் அமையவில்லையே என தெரிவித்துள்ளார்.

பாலிவுட் ஹீரோயின்கள்கிட்ட கேட்குறது மாதிரி இங்கேயும் அப்படி கேள்வி கேட்டா நாங்க என்ன பதில் சொல்வது என்ற அவர், நம்ம சூழல் வேறயாச்சே? என்றார்.

மேலும் பாய் ஃப்ரெண்டு பத்தியெல்லாம் யோசிக்கக் கூட இப்ப டைம் இல்லை. ஐடியாவும் இல்ல. அதான் உண்மை என்றும் கூறியுள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

தற்போது தெலுங்கில் நடித்து வருதால் தெலுங்கு மொழியும் கற்றுவருவதாக கூறியுள்ள அவர், விரைவில் தெலுங்கு மொழியை சரளமாக பேச கற்றுக்கொண்டு இரண்டு மொழிகளிலும் கவனம் செலுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார் நிவேதா பெத்துராஜ்.

Sharing is caring!