பாராட்டு… பாராட்டு… நித்யா மற்றும் அவர் மகளுக்கு பாராட்டு

சென்னை:
பாராட்டுக்கள் குவிகிறது தாடி பாலாஜியின் மனைவி மற்றும் மகளுக்கு. எதனால் தெரியுங்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ல் கலந்துகொண்ட பிரபலங்கள் தாடி பாலாஜி மற்றும் அவரின் மனைவி நித்யா. முதல் சில வாரத்திலேயே நித்யா வெளியேறினாலும், பாலாஜி கடைசிக்கு முன் வரை வந்து பின் வெளியேறினார்.

இருவரும் கருத்து வேறுபாடாகி பிரிந்து வாழ்ந்து தற்போது மீண்டும் சேர்ந்து வாழத்தொடங்கியுள்ளனர். கமல்ஹாசனும் அவருக்கு அறிவுரைகள் வழங்கினார். அவர்களுக்கு போஷிகா என்ற மகளும் இருக்கிறார்.

தற்போது அம்மாவும் மகளும் தங்கள் ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளனர். அவர்கள் அந்த முடியை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் செய்வதற்காக கொடுத்துவிட்டார்களாம். இதையடுத்து 2 பேருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!