பார்த்திபன் மகள் திருமணத்திற்கு வந்த எதிரும், புதிரும்: வியந்த பிரபலங்கள்

திரை உலகமே திரண்ட பார்த்திபன் மகள் திருமணம்!

சென்னை: பார்த்திபன் மகள் திருமணத்திற்கு வந்த இரண்டு பேரை பார்த்து திரையுலகினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

நடிகரும், இயக்குனருமான பார்த்திபனின் இளைய மகள் கீர்த்தனாவுக்கும், அவரின் காதலர் அக்ஷய் அக்கினேனிக்கும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று திருமணம் நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இசைஞானி

பார்த்திபன் வீட்டு விசேஷத்தில் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பார்த்திபன் பிரபலங்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்து

பாடகர் எஸ்.பி. பி. நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். ஒரு காலத்தில் ஒன்றாக இருந்து தற்போது பிரிந்துவிட்ட இளையராஜாவையும், எஸ்.பி.பி.யையும் ஒரே நிகழ்ச்சியில் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திமுக

பார்த்திபன் மகளின் திருமண நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டும் அல்ல திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினும் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார்.

பாமக

பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸும் பார்த்திபன் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டார். திரையுலக பிரபலங்கள் தவிர்த்து அரசியல் தலைவர்களும் வந்து வாழ்த்தினார்கள்.

கமல்

உலக நாயகன் கமல் ஹாஸன், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள். நடிகர்கள், இயக்குனர்கள் என பலரும் வந்திருந்தனர்.

ஆசி

அரசியல் கட்சி துவங்கும் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் திருமண நிகழ்ச்சிக்கு வந்து மணமக்கள் ஆசிர்வாதம் செய்தார்

ஷோபா

தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி.யும், அம்மா ஷோபாவும் கீர்த்தனா, அக்ஷய் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார்கள்.

Sharing is caring!