பாலாவின் இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ்

பாலா இயக்குநரான அறிமுகமான சேது படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பாலாவை திரும்பிப்பார்க்க வைத்தது. அதோடு, நீண்டகாலமாக சினிமாவில் போராடி வந்த விக்ரமிற்கு திருப்புமுனை படமாக அமைந்தது.

அதன்காரணமாகவே தனக்கு சினிமாவில் திருப்பு முனையை ஏற்படுத்திக்கொடுத்த பாலாவின் இயக்கத்திலேயே தனது மகன் துருவ்வையும் அறிமுகம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட விக்ரம், தற்போது பாலாவின் இயக்கத்தில் வர்மா படத்தில் தனது மகனை நடிக்க வைத்து அவரது மோதிரக்கையினால் குட்டு வாங்க வைத்து விட்டார்.

இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் நடந்தது. அப்போது வர்மா படத்தில் துருவிடம் பணியாற்றியது பற்றி பாலா கூறுகையில், துருவை சின்ன வயதில் இருந்தே எனக்கு தெரியும். எதையும் ரொம்ப உன்னிப்பாக கவனிப்பான். அதனால் அவனிடம் வேலைவாங்குவது கடினமில்லை என்பது எனக்குத் தெரியும். அதேபோல் படப்பிடிப்பு தளத்தில் முதல் நாளிலேயே எனது கட்டுப்பாட்டுக்கு வந்து விட்டான் என்று கூறினார்.

Sharing is caring!