பாலியல் சர்ச்சை… நடுவர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட அனுமாலிக்

மும்பை:
மீ டூ பாலியல் சர்ச்சை எழுந்ததால் டிவி நிகழ்ச்சியில் இருந்து பிரபல இசையமைப்பாளர் அனுமாலிக்கை விலக்கி உள்ளது சேனல்.

டிவி நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதற்கு மற்ற டிவி சானல்களுக்கு நடுவே டிவி ரேட்டிங்க்ஸை பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் இந்தி சேனலில் இந்தியன் ஐடோல் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதை பிரபல இசையமைப்பாளர் அனுமாலிக் நடுவராக பணியாற்றி வந்தார். அவர் மீது பிரபல பாடகிகள் ஸ்வேதா பண்டிட், சோனா மொகாபத்ரா ஆகியோர் மீ டூ மூலம் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறினர்.

இதனால் பெரும் சர்ச்சையாக அவரை நிகழ்ச்சியிலிருந்து விலகுமாறு சோனி நிறுவனம் கேட்டுக்கொண்டது. இதனால் அவரும் விலகிவிட்டார். அவர் ஓய்வுக்காக விலகியதாக கூறினார்.
இந்நிலையில் சோனி நிறுவனம் அனுமாலிக் இனி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார். நிகழ்ச்சி தொடர்ந்து நடக்கும் என அறிவித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!