பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக துணை நிற்கிறேன்

25 வருடங்களுக்கு முன்பு தானும் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் தெரிவித்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் தாங்கள் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் #Metoo – வை குறிப்பிட்டு குற்றச்சாட்டுகாகப் பதிவிட்டு வருகிறார்கள்.

சினிமாத்துறை, பத்திரிகைத்துறை, அரசியல் என பல தரப்புகளிலிருந்தும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுகுறித்து பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான்,

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக துணை நிற்கிறேன். அவர்களது கடந்து வந்த அந்த கடினமான பாதையை என்னால் உணர முடிகிறது. நானும் 25 வருடங்களுக்கு முன்னர் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டேன். அதனை நினைத்து எனக்கு இப்போது கோபம் உள்ளது. சில மனிதர்கள் இந்த வலியை புரிந்துகொள்ள மாட்டார்கள். மற்ற மனிதனின் வலியை புரிந்துகொள்வது மிகக் கடினமானது. கொடுக்கப்பட்ட புகார்களின் உண்மைத்தன்மையைக் கண்டறிந்து தண்டனை வழங்கப்பட வேண்டும். பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துபவர்கள் நிச்சயம் தண்டனை பெற வேண்டும்.

என குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!