பாலிவுட்டிலும் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் ஜோடி

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளம் அமைத்த இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 2007–ல் தமிழ் மற்றும் ஹிந்தியில் திரைக்கு வந்த ‘குரு’ படத்தில் ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் ஜோடியாக நடித்து இருந்தனர். குரு படப்பிடிப்பில்தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். அதன்பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் ராவணன் என்ற பெயரிலும் இந்தியில் ராவண் என்ற பெயரிலும் தயாரான படத்தில் இணைந்து நடித்தார்கள்.

ஹிந்தியில் ராவன் திரைப்படம் 2010–ல் வெளிவந்தது.  இருவரும் ஜோடியாக நடிக்க அடுத்த வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் இருவரும் ‘குளோப் ஜாமுன்’ என்ற ஹிந்தி படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை இயக்குகிறார் அனுராக் காஷ்யப் . இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்ற தகவல் வெளியானது.

இந்த படத்தில் நடிப்பது குறித்து ஐஸ்வர்யா ராயிடம் கேட்டபோது ‘‘இயக்குனர் அனுராக் காஷ்யப் ஒரு வருடத்துக்கு முன்பே படத்தின் கதையை சொல்லிவிட்டார். மிகவும் பிடித்து இருந்தது. இப்போது அதில் நானும் அபிஷேக் பச்சனும் இணைந்து நடிக்கிறோம்’’என்று கூறினார்.

Sharing is caring!