பாலிவுட்டில் கால்வைக்கும் கீர்த்தி சுரேஸ்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்துக்கொண்டு இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், விரைவில் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழில் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ், சென்ற ஆண்டு வெளியான மகாநதி படத்திற்கு பிறகு நடிப்பிற்காக பாராட்டுக்களை பெற்று வருகிறார். இந்நிலையில் தென்னிந்தியாவில் கலக்கி வரும் இவர் தற்போது பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது அஜித் நடித்து வரும் பிங்க் திரைப்படத்தின் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை தயாரித்துள்ள மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் தான் கீர்த்தியும் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இந்த படத்தை பதய் ஹோ படத்தை இயக்கிய அமித் சர்மா  இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள புதிய படத்தில் கீர்த்தி இணைவார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!