பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு மெகுழு சிலை

பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெகுழு சிலை வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த நடிகை சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார். பலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சன்னி லியோ தமிழ் படம் ஒன்றிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபலங்கள் பலருக்கும் வைக்கப்படும் மெழுகு சிலை தற்போது இவருக்கும் வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்ப்பட்டுள்ளது.

இந்த மெழுகு சிலையை நடிகை சன்னி லியோன் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த கவுரவத்திற்காக என்னை தேர்வு செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த அழகான சிலையை செய்தவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

Sharing is caring!