பாலிவுட் வில்லன் நடிகர் மர்ம மரணம்… பரபரப்பு

மும்பை:
பாலிவுட் வில்லன் நடிகர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் மகேஷ் ஆனந்த் (57) தனது வீட்டில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். 1980 மற்றும் 90 களில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப், தர்மேந்திரா, கோவிந்தா, சஞ்சய்தத் உள்ளிட்ட நடிகர்கள் படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் மகேஷ் ஆனந்த்.

தமிழில் விஜயகாந்த் நடித்த பெரிய மருது, ரஜினி நடித்த வீரா படங்களில் வில்லனாக நடித்துள்ளார். கடைசியாக ரங்கீலா ராஜா என்ற படத்தில் கோவிந்தாவுடன் நடித்துள்ளார். இப்படம் கடந்த ஜன. 18-ல் ரிலீசானது. இவரது மனைவி ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் வசித்து வருகிறார்.

மும்பை அந்தேரி பகுதியில் வீட்டில் தனியாக வசித்த நிலையில் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேசத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையா, தற்கொலையா என விசாரணை நடக்கிறது. இச்சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி: பத்மா மகன், திருச்சி

Sharing is caring!