பாவம் தனுஸ்! நிறுவனம் மூடப்படும் அபாயம்!

நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகம் காட்டி வருகிறார். மேலும் தயாரிப்பாளராக வுண்டர்பார் பிலிம்ஸ் என்ற பன்னாட்டி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இதன் மூலம் முக்கிய படங்களான 3, எதிர் நீச்சல், வேலையில்லா பட்டதாரி, ஷமிதாப், காக்கி சட்டை, காக்கா முட்டை, மாரி, நானும் ரவுடி தான், தங்கமகன், விசாரணை, அம்மா கணக்கு, பா.பாண்டி, வேலையில்லா பட்டதாரி 2, வடசென்னை, மாரி 2 என படங்களை தயாரித்துள்ளார்.

ஆனால் சரியான நிர்வாக திறன் இல்லாததால் இந்நிறுவனம் நஷ்டத்தில் ஓடுவதாக சொல்லப்படுகிறது. இதனால் இதை தனுஷ் மூட முடிவு செய்துள்ளதாக தகவல் சுற்றி வருகிறது.

மேலும் இதன் மேனேஜர் வினோத் சொந்தமாக படம் தயாரிக்க போகிறாராம். இதில் விஷால் ஹீரோவாக நடிக்க போகிறாராம். இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Sharing is caring!