பா.ரஞ்சித்தின் அடுத்த படம் இந்தியிலா?

சென்னை:
அடுத்த படம் இந்தியில் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. என்ன விஷயம் தெரியுங்களா?

ரஜினியை வைத்து இயக்குனர் பா.ரஞ்சித் கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கினார். காலா படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. படத்தை தயாரித்த நடிகர் தனுஷ் படம் தனக்கு லாபம் கொடுத்துள்ளது என அறிவித்தார்.

இந்நிலையில் அடுத்து யாருடன் பா.ரஞ்சித் இணைவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் அவர் பாலிவுட் நடிகர் அமீர் கானை சமீபத்தில் சந்தித்து கதை சொல்லியிருப்பாதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் இந்த பிரம்மாண்ட கூட்டணி இணையுமா என்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் தெரியவரும்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!